நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. கரோனா பாதிப்பால் 50 வயதுக்கும் மேற்பட்டோரே உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் தற்போது டெல்லியில் பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள கலாவதி சரன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்றுவந்த இக்குழந்தை சிகிச்சைப் பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளது.