கரோனா தொற்றால் எல்லை பாதுகாப்புப் படையினர் (பி.எஸ்.எஃப்) பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 44 (டெல்லி - 22, திரிபுரா -22) வீரர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதுவரை 192 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போது 163ஆக இருப்பதால், அவர்கள் அனைவரையும் கரோனாவிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளை மருவத்துவர்கள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.