தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத 4,327 உள்ளாட்சி அமைப்புகள்! - தூய்மை பாரதம் திட்டம்

நாட்டில் 4 ஆயிரத்து 327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பாரதம் (ஸ்வச் பாரத்) திட்டத்தின் கீழ் திறந்த மலம் கழித்தல் இல்லாததாக அறிவித்துள்ளன.

open defecation-free Swachh Bharat 4,327 urban local bodies திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பாரதம் திட்டம் திறந்த வெளி மலம் கழித்தல்
open defecation-free Swachh Bharat 4,327 urban local bodies திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பாரதம் திட்டம் திறந்த வெளி மலம் கழித்தல்

By

Published : Oct 2, 2020, 8:22 PM IST

டெல்லி: தூய்மை பாரதம் திட்டத்தின் (ஸ்வாச் பாரத் மிஷன்) கீழ் நகர்ப்புறத்தின் கீழ் நாட்டில் இதுவரை 4,300 க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்த மலம் கழித்தல் இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகம் தனது அறிக்கையில், 66 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் வீட்டு கழிப்பறைகள் மற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகளை கட்டியதன் மூலம் இந்தச் சாதனை சாத்தியமானது, இது திட்டத்தின் இலக்குகளை காட்டிலும் அதிகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தூய்மை பாரதம் திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தம் 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்த மலம் கழித்தல் இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளின் சாதனைகளை கொண்டாடுவதோடு, மாநிலங்கள் மற்றும் நகரங்களின் அனுபவப் பகிர்வுடன் கவனம் செலுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புண்ணில் நெளிந்த புழுக்கள்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் உள்பட மூவர் சஸ்பெண்டு!

ABOUT THE AUTHOR

...view details