கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய் நாளுக்கு நாள் நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுக்கொண்டே வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கரோனாவால் புதிதாக 17 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனா தீநுண்மியால் இதுவரை நான்கு லட்சத்து 90 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
இரண்டு லட்சத்து 85 ஆயிரத்து 637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்து 301 பேர் ஆகும். இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ஜூன் 25ஆம் தேதிவரை நாட்டில் 77 லட்சத்து 76 ஆயிரத்து 228 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், ஜூன் 25இல் மட்டும் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 446 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 24 மணி நேரத்தில் 3,390 பாதிப்பு, 64 உயிரிழப்பு!