உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள காய்ர் (khair) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக காய்ர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, புலந்த்ஷெஹர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய மூவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.