ஐதராபாத் (தெலங்கானா): சைதாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட சிங்கரேணி எனுமிடத்தில் நான்கு வயது சிறுவனை தெருப் பன்றிகள் தாக்கியதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பன்றி தாக்கியதில் நான்கு வயது சிறுவன் மரணம்! - பன்றிகள் கடித்து சிறுவன் பலி
பன்றிகள் தாக்கியதில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை கேஷ்யா காவல் துறையினரிடம் அளித்த புகாரில், “குழந்தை ஹர்ஷவர்தன் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். யாரும் எதிர்பார்க்காத வேளையில், தெருவில் திரிந்த பன்றிக் கூட்டம், என் மகனை இழுத்து குப்பை தொட்டி அருகே தள்ளி, கடித்து படுகாயம் ஏற்படுத்தியது. அதில் என் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.