மத்தியப்பிரதேச ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் கிணற்றை சுற்றி சுவர் எழுப்பிய நான்கு தொழிலாளர்கள் சுவர் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். அவர்களுடைய உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.
கிணறு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு! - கிணறு தோண்டிய நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு
போபால்: ஷாஜாபூர் மாவட்டத்தில் கிணறு பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அவர்களை கண்காணிக்கத் தவறிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஷாஜாபூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், கிணற்றின் சுவர் சரிந்து விழுந்து உயிரிழந்த தொழிலாளர்கள் குறித்த செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாகவும் உயிரிழந்த தொழிலாளர்களின் ஆன்மா சந்தியடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..