உத்தரப் பிரேதசம் மாநிலம் ஷாஜகான்பூர் அடுத்த புவயா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை அதேபகுதியைச் சேர்ந்த நான்கு பேர் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சிறுவன், நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
13 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 4 காமுகர்கள்..! - 13-year-old boy.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுவனை நான்கு பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்புணர்வு
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஹ்மான், ரவி, குல்லி, வாசிம் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.