கோவையில் இருந்து ரயில் மூலம் வாரணாசி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா சென்ற குழுவினர், எஸ்-8, எஸ்-9 பெட்டிகளில் பயணித்துள்ளனர். திங்கட்கிழமையன்று, வடமாநிலங்களை வாட்டியெடுத்த கோடை வெப்பத்திற்கு, இந்த ஓடும் ரயிலில் இருந்த ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகளும் தப்பிக்கவில்லை.
உ.பி.க்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற 4 தமிழர்கள் பரிதாப பலி! - kerala express
லக்னோ: ஆக்ராவிலிருந்து கோவைக்கு கேரள விரைவு ரயிலில் வந்த நான்கு முதியவர்கள் கடும் கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டு, ஓடும் ரயிலிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![உ.பி.க்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற 4 தமிழர்கள் பரிதாப பலி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3532825-thumbnail-3x2-yt.jpg)
4முதியவர்கள் கோடை வெயிலுக்கு பலி
குறிப்பாக, வயதானவர்கள் கடுமையான வெப்பத்தாலும், அனல் காற்றாலும் பெரும் அவதிக்கு ஆளாகினர். ஒருவித உடல்சோர்வுக்கு ஆளானவர்களில், நான்கு முதியவர்கள், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நகர் அருகே அந்த ரயில் சென்றடைவதற்கு முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர், ஜான்சி நகரின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிரிழந்த நால்வரும், கோவையிலிருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Jun 12, 2019, 7:45 AM IST