ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்கா மாவட்டத்தில் பேருந்துப் பயணிகளிடம் கொள்ளையடித்துவந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 35.5 லட்சம் பணம், நாட்டு ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பேருந்துகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நால்வர் கைது! - பேருந்தில் கொள்ளையடித்த நான்கு பேர் கைது
ஜார்க்கண்ட்: பேருந்துப் பயணிகளிடம் கொள்ளையடித்துவந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.35.5 லட்சம் பணம், நாட்டு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
![பேருந்துகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நால்வர் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4474153-987-4474153-1568778646505.jpg)
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கண்காணிப்பாளர் ஒய்.எஸ். ரமேஷ், ஆகஸ்ட் 28ஆம் தேதி பிகாரின் பாகல்பூரிலிருந்து கொல்கத்தா சென்ற பேருந்தில் சிலர் பயணிகளிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்தனர். அவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், மொபைல்ஃபோன்கள், கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
மேலும் பேசிய அவர், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் 96 இடங்களில் போலீசார் நான்கு குழுக்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த தேடுதல் வேட்டையில், குற்றம் சாட்டப்பட்ட 14 நபர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பிகாரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தும்காவை சேர்ந்தவர். இவர்களிடம் விசாரனை நடத்தி மீதமுள்ள நபர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.