இந்திய பெருளாதாரம் குறித்த கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 விழுக்காடு வளர்ச்சி மட்டுமே அடைந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது கவலையளிக்கும் விதமாக உள்ளது. சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை துடைத்துவிட்டு, பரஸ்பரம் அன்பை செலுத்தும் சமூகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.
பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்த முன்னாள் பிரதமர்..! - பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்த முன்னாள் பிரதமர்
டெல்லி: 4.5 விழுக்காடு ஜிடிபி வளர்ச்சி கவலையளிக்கும் விதமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Manmohan
இதன் மூலம் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். பரஸ்பர நம்பிக்கை மட்டுமே சமூகத்தை மாற்றியமைக்கும். பெருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். சகோதரத்துவம் கொண்ட சமூக அமைப்பு கிழிக்கப்பட்டுள்ளது. அவநம்பிக்கை, பயஉணர்வு ஆகியவை தான் பொருளாதார வளர்ச்சியை தடுக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா தாக்கரே அரசு?