தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஐ-எம் இளைஞர் பிரிவைச் சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை : காங்கிரஸைச் சேர்ந்த 4 பேர் கைது - முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : சிபிஐ-எம் இளைஞர் பிரிவவைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

4-cong-workers-arrested-for-murder-of-two-cpi-m-activists
4-cong-workers-arrested-for-murder-of-two-cpi-m-activists

By

Published : Sep 1, 2020, 3:20 PM IST

கேரள மாநிலத் தலைநகரின் புறநகர்ப் பகுதியான வெஞ்சரமூடு என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) நள்ளிரவில் சிபிஐ-எம் இன் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஹக் முகமது (வயது 24), மிதிலாஜ் (வயது 32) ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் ஆயுதமேந்தி வந்த ஐந்து பேரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலையைக் கண்டித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அம்மாநில சிபிஐ-எம் உயர்மட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், இந்தச் சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்து வந்தது.

முதல் தகவல் அறிக்கையில் அரசியல் கொலை எனக் குறிப்பிடப்படாத நிலையில், காவல் துறையினர் விசாரணையில் கடந்த ஆண்டு காங்கிரஸ், சிபிஐ-எம் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையே மோதல் நடைபெற்றதும், பின்னர் அது சமாதானத்தை எட்டியதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த இரட்டைக் கொலை வழக்கில் தற்போது காங்கிரஸ் தொண்டர்கள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இருவர், தற்போது வரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிபிஐ-எம் கட்சியினர் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களின் பல இடங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை சேதப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details