தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கிகள் இணைப்பு திட்டத்தை எதிர்த்து - வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் - வங்கிகள் இணைப்பு திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம்

மும்பை: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு வங்கி ஊழியர் சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.

continuous-strike

By

Published : Sep 13, 2019, 12:56 PM IST

மத்திய அரசானது தேசியமயமாக்கப்பட்ட பத்து வங்கிகளை இணைக்கப் போவதாக முன்னதாக அறிவித்திருந்தது. இதற்கு பல வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இதனைக் கண்டித்து அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம் (AIBOA), இந்திய தேசிய வங்கி அலுவலர்களின் காங்கிரஸ் (INBOC), தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு (NOBO) ஆகிய நான்கு வங்கி ஊழியர் சங்கங்கள், வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் 27ஆம் தேதி வரை இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுடன் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 30ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details