மகாராஷ்டிரா மாநிலம், புனேவை அடுத்துள்ள விமான் நகரில் உள்ள ஒரு பார்க்கிங்கில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கினர்.
பார்க்கிங் ஊழியர்கள் தாக்கப்படும் வைரல் வீடியோ! - பார்கிங் ஊழியர்கள்
மும்பை: பார்க்கிங் ஊழியர்கள் நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காணொலி வைரல்
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடி வருவதைப் பார்த்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் காயமடைந்த ஊழியர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பார்க்கிங் ஏரியாவில் இருந்த காணொலிக் காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.