17ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது. இதனையடுத்து மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்துவந்தது.
இந்நிலையில், குஜராத் (26),கேரளா (20), கர்நாடகா (14), பீஹார் (5),மகாராஷ்டிரா (14), ஒடிசா(6), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (5), கோவா (2), அஸ்ஸாம் (4),திரிபுரா (1), ஜம்மு-காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (7) உள்ளிட்ட மாநிலங்களிலும் டாமன்-டையூ (1), தாத்ரா நாகர் ஹவேலி (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 117 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.