டெல்லி:இந்தியாவைச் சேர்ந்த 39 பேர் எம்.வி.ஜாக் ஆனந்த் மற்றும் எம்.வி.எம்.வி அனஸ்தேசியா என்ற இரண்டு சரக்கு கப்பல்களில் சீனாவிற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றனர். இவர்களது கப்பல் பழுதாகியதால் சீனக் கடலின் இருவேறுப் பகுதிகளில் அவை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
சீனக் கடலில் 39 இந்தியர்கள்
எம்.வி.ஜாக் ஆனந்த் கப்பலில் பயணித்த 23 இந்தியர்கள், கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்திற்கு அருகேயுள்ளனர். எம்.வி.அனஸ்தேசியா கப்பலில் பயணித்த 16 இந்தியர்கள், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் சீனாவின் கஃபீடியன் துறைமுகத்திற்கு அருகேயுள்ளனர்.
சீனாவைத் தொடர்பு கொள்ளும் இந்தியா
சீனக் கடலில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவைத் தொடர்பு கொண்டுள்ளது. கப்பல்களில் உள்ள சரக்குகளை வெளியேற்றுவது குறித்தும் ஆலோசணை நடைபெற்று வருகிறது.
கரோனா கட்டுப்பாடுகள்
இது குறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "கடந்த சில மாதங்களாக சீனக் கடலில் சிக்கித் தவிக்கும் 39 இந்தியர்களை மீட்க சீனாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களது தேவைகளை நிறைவேற்றப்படுவதையும் தொடர்ந்து உறுதி செய்துவருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் நிலவுவதால் சீன அலுவலர்கள் சரக்குகளை மீட்கவும், இந்தியர்களுக்கு உதவவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: இலங்கையில் சிக்கியுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்