தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வைரசால் விமானங்கள் ரத்து - மலேசியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்... - Covid-19 pandemic in india

கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு காரணமாக விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால், மலேசியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

37-tamil
37-tamil

By

Published : Mar 18, 2020, 2:42 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதையடுத்து, வைரஸ் தொற்று காணப்படும் நாடுகளிலிருந்து விமானங்கள் இந்தியாவிற்கு வர மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் மலேசியாவில் மருத்துவம் படித்துவருகின்றனர். தற்போது கரோனா பாதிப்பு எதிரொலியால், அங்கிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'கரோனாவால் ஒரு மாதம் போராட்டங்கள் ரத்து'

ABOUT THE AUTHOR

...view details