இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காயம் உற்பத்தி பற்றாக்குறையால் விற்பனை விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவந்தது.
இந்நிலையில், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், "இந்தியாவில் தற்போதுவரை 12 ஆயிரம் டன் வெங்காயம் துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே ஆயிரம் டன் வெங்காயம் டெல்லி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் மாநிலத்தின் சில்லறை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ ரூ.49-58க்கு வழங்கப்படுகிறது.
மேலும், இந்த ஜனவரி மாதம் இறுதியில் 36 ஆயிரம் டன் வெங்காயம் கூடுதலாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விற்பனை விலை ரூ. 100ஐ தாண்டிய நிலையில், தற்போது வெளிநாடுகளிலிருந்து வெங்காயம், புதிய மானாவாரி சாகுபடி பயிர்கள் வருகையால் விலை குறைந்து காணப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'கவுன்சிலரைக் காணோம் கண்டுபிடிச்சுத் தாங்க!' - பொதுமக்கள் புகார்