அமெரிக்காவின் அரசு சாரா அமைப்பான கிளைமேட் சென்ட்ரல் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியிடுவதை 2050ஆம் ஆண்டுக்குள் தடுக்காவிட்டால் 36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - அதிர்ச்சி தகவல் - 36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
டெல்லி: 36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flood
2100ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 44 மில்லியனாக அதிகரிக்கும். இந்தியா, சீனா, வியட்நாம், வங்க தேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 237 மில்லியன் மக்கள் 2050ஆம் ஆண்டுக்குள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பார்கள் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வாழம் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததுதான் இதற்கு காரணமாக இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
Indians Affected by Flood