தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 1, 2020, 3:29 PM IST

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேச தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 359 மாணவர்கள்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 359 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UP Board exam cheating
UP Board exam cheating

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் முறையாக நடத்தப்படுவது இல்லை என்றும் ஆண்டுதோறும் பல மாணவர்கள் தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில், 359 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக பிடிபட்டுள்ளனர்.

முன்னதாக தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக 133 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தேர்வில் களங்கம் விளைவிக்கும் பள்ளிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உரிய முறையில் தேர்வு நடத்தாத 29 பள்ளிகளின் தேர்வு நடத்தும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு - விஎச்பி கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details