கரோனா காலத்தில் பல்வேறு தரப்பினர் இன்னலுக்கு உள்ளான நிலையில், மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கரோனா முன்களப் பணியாளர்களாக நாட்டை காக்கும் பொருட்டு போராடினர்.
இந்தக் காலக்கட்டத்தில், 343 காவலர்கள் தங்கள் உயிரினை தியாகம் செய்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமைந்துள்ள தேசிய காவலர் நினைவிடத்திற்குச் சென்ற அமித் ஷா, பணியிலிருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பினை ஏற்றுக் கொண்ட அவர், "இது கல் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் மட்டும் அல்ல என்பதை காவல் துறையினரின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.