தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே மருத்துவமனையில் 33 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா - ஒரே மருத்துவமனையில் 33 சுகாதார பணியாளர்களுக்கு கரோனா

டெல்லி: மாக்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் 33 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Corona
Corona

By

Published : Apr 27, 2020, 12:07 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

குறிப்பாக, டெல்லியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவரும் 2 மருத்துவர்கள், 23 செவிலியர் உள்பட 33 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மருத்துவப் பணியாளர்கள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் என அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில், 33 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு அவர்கள் அனைவரையும் மாற்றியுள்ளோம்.

எங்கள் மருத்துவமனையில் பணியாற்றிவரும் 145 செவிலியரைக் கடந்த 14 நாள்களாக அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியிலேயே தனிமைப்படுத்தினோம். தற்போது அந்த விடுதிக்குச் சீல்வைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையைச் சேர்ந்த 29 சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையும் படிங்க: மருத்துவத் துறையில் சாதிக்கும் இந்திய ரயில்வே!

ABOUT THE AUTHOR

...view details