தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் 301 பேருக்கு கரோனா பாதிப்பு: 169 ஹாட்ஸ்பாட் பகுதிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 301 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

By

Published : Jul 9, 2020, 8:39 AM IST

corona
corona

இந்தியாவில் முதல் முறையாக கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக அண்மையில் கேரள அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் கரோனா தொற்றின் தாக்கம் குறைய வாய்ப்பில்லாத நிலையில், தொற்றுநோய் தடுப்பு தொடர்பான சட்டத்தை 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவனந்தபுரத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் முதல் முறையாக இதுவரை இல்லாத அளவிற்கு 301 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 195ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது, "கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 99 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 95 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 90 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 2ஆயிரத்து 605 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் குணமடைந்ததன் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மொத்தமாக 28 பேர் உயிரிழந்தனர்.

ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 546 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 409 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11ஆயிரத்து 250 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 96ஆயிரத்து 183 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், 4ஆயிரத்து 754 மாதிரிகள் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. மேலும், கேரளாவில் மொத்தம் 169 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாழ்வாதாரம் இழந்த யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என தீர்மானம் - அமித் ஷா வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details