தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பசியால் உயிரிழந்த 300 காட்டெருமைகள் - சிக்கிமில் பரிதாபம்! - hunger

கேங்டாக்: கடுமையான பனிப்பொழிவுக் காரணமாக உணவின்றி பசியால் 300க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உயிரிழந்துள்ளதாக சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது.

காட்டெருதுகள்

By

Published : May 14, 2019, 10:23 PM IST

Updated : May 15, 2019, 7:29 AM IST


சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் காட்டெருமைகள் வாழ்ந்து வருகிறது. கடுமையான பனிப்பொழிவுக் காலங்களில் காட்டெருமைகள் உணவை தேடிச்செலலாமல் ஒரே இடத்தில் முடங்கிவிடும்.

இதேநிலை நீடிக்கும்போது சில நாட்களில் பசி காரணமாக உயிரிழந்துவிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதம் முதல் உணவின்றி பசியால் 300க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உயிரிழந்திருக்கலாம் என சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள விலங்குகளை காப்பாற்ற மருத்துவக்குழுவினரை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசியால் இறந்து கிடக்கும் காட்டெருமைகள்

காட்டெருமைகள் உயிரிழப்பு குறித்து வடக்கு சிக்கிமின் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கேங்டாக்கில் இருந்து வாகனத்தில் செல்ல நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகின்றது. கடைசி மூன்று மாதங்களில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் சாலைகளும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டெருமைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தோம்.

ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்படரையும் இயக்க முடியவில்லை. வழக்கமாக பனிக்காலங்களில் வருடத்திற்கு 10 முதல் 15 காட்டெருமைகள் உயிரிழக்கும். ஆனால், இந்த வருடம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மீதமுள்ள காட்டெருமைளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Last Updated : May 15, 2019, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details