இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையில் பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் தலைவர் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
'ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் நரேந்திர மோடி' - மோடியை பின்தொடரும் மனிதர்கள்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் அதிபர் ஒபமா ஆகியோரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
!['ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் நரேந்திர மோடி'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4741345-thumbnail-3x2-narendramodi.jpg)
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடியை அடுத்து இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை 25.6 மில்லியன் பேரும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை 24.8 மில்லியன் பேரும் இன்ஸ்டாகிராமில் பின்தொடருகின்றனர். அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்பை, ட்விட்டரில் 65.7 மில்லியன் பேரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 50.7 மில்லியன் பேரும் பின்தொடருகின்றனர். விரைவில் ட்விட்டரிலும் டிரம்ப்பை மோடி முந்திவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.