ஆந்திர மாநிலம், வடக்கு கோதாவரி மாவட்டம், புட்டேயாகுதேம் கிராமத்தைச் சேர்ந்த அபிசந்திரன் என்ற சிறுவன் நேற்றுமுன் தினம் அதேப் பகுதியில் உள்ள கடையில் சாக்லேட் வாங்கி தனது நண்பர்களான ராகுல், சந்தோஷூடன் சாப்பிட்டுள்ளான். அப்போது மூன்று பேரும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அபிசந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
காலாவதியான சாக்லேட்டால் பலியான மூன்று வயது சிறுவன்! - மூன்று வயது சிறுவன் பலி
அமராவதி: காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
3-yr-old boy
மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் மூவரும் காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.