தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது! - 3 வயது குழந்தை கற்பழிப்பு

உனா: 3 வயதான பிஞ்சு குழந்தை 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

qperape
qpe

By

Published : Oct 2, 2020, 7:33 PM IST

ஹிமாச்சல் பிரதேசத்தில் உனா மாவட்டத்தில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்த தகவலின்படி, பெண் குழந்தை அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்துள்ளது. சோர்வடைந்து காணப்பட்ட குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், 11 வயது சிறுவன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details