தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு - Telangana child Bore Well dead

ஹைதராபாத்: மேதாக் மாவட்டத்தில் விவசாய ஆழ்துளை கிணற்றில் நேற்று விழுந்து மூன்று வயது சிறுவன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்று உயிரிழந்தார்.

3-year-old-child-fell-and-dead
3-year-old-child-fell-and-dead

By

Published : May 28, 2020, 8:01 AM IST

Updated : May 28, 2020, 8:13 AM IST

தெலங்கானா மாநிலம் மேதாக் மாவட்டம் போச்சன்பள்ளி கிராமத்தில் நேற்று விவசாய ஆழ்துளை கிணறு புதிதாக தோண்டப்பட்டது. அந்தக் கிணற்றில் எதிர்பாரத விதமாக சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துள்ளார். கிணறு தோண்டப்பட்டு அரைமணி நேரமே ஆனதால் சாய் வர்தனின் பெற்றோர்கள் அப்பணிகளில் மும்முரமாக இருக்கும் வேலையில் குழந்தை கிணற்றில் விழுந்துள்ளார்.

அதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர், காவல்துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு முழுவதும் போராடியும் அதிகாலையில் சிறுவன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து அவனது உடல் மீட்கப்பட்டு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போது

இதையும் படிங்க:ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 5 வயது சிறுவன்!

Last Updated : May 28, 2020, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details