ஒடிசா மாநிலத்தில் பண்டாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியின் மேற்கூரை அமைக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத வகையில், தொட்டியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உள்ளே இருந்த மூன்று தொழிலாளர்கள் பலியாகினர்.
ஒடிசாவில் கழிவுநீர் தொட்டியின் மேற்கூரை இடிந்து மூன்றுபேர் பலி! - மூவர் பலி
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கழிவுநீர் தொட்டியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்றுபேர் பலியாகியுள்ளனர்.
கழிவுநீர் தொட்டி இடிந்து மூவர் பலி
தகவலறிந்து வந்த காவல்துறையினர் பலியான தொழிலாளர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்த தொழிலாளர்கள் மூன்றுபேரும் மேற்வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
Last Updated : Aug 2, 2019, 7:12 PM IST