தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாமில் கனமழை: மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன! - அசாமில் மூன்று டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

3 trucks washed

By

Published : Oct 28, 2019, 11:48 AM IST

Updated : Oct 28, 2019, 3:28 PM IST

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

கபிலி ஆறு அபாய கட்டத்தை எட்டியது

அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அதனுடைய அபாய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இதனால் ப்ரம்பூரிலிருக்கும் ஏரிக்கரை உடையும் வாய்ப்புள்ளது. அப்பகுதியில் இருக்கும் மக்கள் உயர் அலுவலர்கள் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் குழந்தைகள் திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு

Last Updated : Oct 28, 2019, 3:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details