டெல்லியில் விக்கி என்னும் 15 வயது சிறுவன் ஜூலை 15ஆம் தேதி காணாமல் போனதாக சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அச்சிறுவனை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு டெல்லி பசாய் தரபார் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
ஐ ஃபோன் தர மறுத்த சிறுவன் கொலை! - சிறுவன்
டெல்லி: ஐ ஃபோன் தர மறுத்த 15 வயது சிறுவனை மூன்று இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத சிறுவன் ஒரு வேளை விக்கியாக இருக்கக்கூடுமோ என்று அச்சிறுவனின் உறவினரை அழைத்து சென்றனர். சந்தேகித்தப்படி உயிரிழந்த சிறுவன் விக்கி என்பது அவனது உறவினரால் அடையாளம் காட்டப்பட்டது. அதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி வைத்து போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது அதில் மூன்று இளைஞர்கள் சிறுவனை கொலை செய்வது போல் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், சிசிடிவியில் பதிவாகியிருந்த மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், விக்கி அவனிடம் இருந்த ஐ ஃபோன், உடமைகளை தர மறுத்ததால் கொலை செய்தோம் என்று மூன்று பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் பேரில் கொலை செய்த மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.