உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் குண்டு துளைக்காத ஜாக்கெட்கள், தோட்டாக்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்த சுனில் சந்திரா, மான்சிங், ராம் கிஷன் மெஹ்ரா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிகளிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து உ.பி.க்கு கைமாறும் சட்டவிரோதாக ஆயுதங்கள்! - உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர்
லக்னோ: சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை விற்பனை செய்த முன்று பேர் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கிரிமினல் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் டெல்லி, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சட்டவிரோதமாக ஆயுதங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை விற்பனை செய்துவருதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
"விஆர்எஸ் எண்டர்பிரைசஸ் நடத்திவரும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மெஹ்ரா, இந்த ஜாக்கெட்டுகளை சென்னையில் ஒருவரிடமிருந்து தலா ரூ .50,000க்கு வாங்கி இங்கு தலா ரூ .1 லட்சத்துக்கு விற்றதாக ஒப்புக்கொண்டார்" என காவல் கண்காணிப்பாளர் நேபாள் சிங் கூறினார்.