தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பன்றிக்காய்ச்சல் - மீண்டும் பணிக்குத் திரும்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நீதிபதிகளில் மூவர் பணிக்குத் திரும்புள்ளளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம்

By

Published : Feb 25, 2020, 10:58 PM IST

கடந்தாண்டு இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 வைரஸ் தொற்று, அவ்வப்போது பரவியது. இந்நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா நீதிமன்றத்திற்கு முகமூடி (மாஸ்க்) அணிந்து வந்திருந்தார். இந்நிலையில், வைரஸ் தாக்குதல் உள்ளதாகக் கண்டறியப்பட்டது நீதிமன்ற வளாகத்தின் தற்போதைய நிலை குறித்து சோதனைகள் செய்யப்பட்டன.

பாதுகாப்பின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் முதலுதவி சார்ந்த நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இதையடுத்து, நீதிமன்ற அறைகள், அங்குள்ள குடியிருப்புகள் சுத்தப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பாதிக்கப்பட்ட அனைத்து நீதிபதிகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீதிபதிகளுக்கு மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் தற்காப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஐந்து நீதிபதிகளும், அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள இரு நீதிபதிகளும் மருத்துவர்களின் கண்காணிப்பின்படி, வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் விளக்கப்பட உள்ளது.

இதற்காக, நாளை வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள், கருத்தரங்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை - காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details