தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யமுனா நதியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு! - tamil national news

ஊரடங்கை மக்கள் சரிவர பின்பற்றுகின்றனரா என்று பல இடங்களில் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அந்த வகையில் யமுனா நதியில், படகில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உட்பட மூன்று பேர் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களின் உடலைத் தேடும் பணியினை தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டு வருகிறது.

Fatehpur news
Fatehpur news

By

Published : Apr 26, 2020, 2:17 PM IST

ஃபதேபூர் (உத்தரப் பிரதேசம்): ஊரடங்கை கண்காணிக்கும் பணியில், யமுனா நதியில் படகில் சென்ற காவல் துறையினர் உட்பட மூன்று பேர் நதியில் மூழ்கி, உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல் உதவி ஆய்வாளர் ராம்ஜித் சிங்கும், காவலர் ஷஷிகாந்த் ஆகிய இருவரும் யமுனா நதியின், பண்டா பகுதியில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த போது தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

படகில் நான்கு பேர் பயணம் செய்ய, நீரோட்டத்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் படகு கவிழ்ந்துள்ளது. இதில் நீரில் விழுந்த ஒருவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூவர்!

காவலர்கள் இருவடன், மற்றொருவரும் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த மூவரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details