தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் வனவிலங்கு கடத்தல்காரர்கள் மூவர் கைது: யானை தந்தம் பறிமுதல்! - stf arrest 3 persons

புவனேஸ்வர்: ஒடிசாவில் யானை தந்தம், சிறுத்தை தோல் ஆகியவற்றை விற்பனை செய்துகொண்டிருந்த மூவரை சிறப்புப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ஒடிசா
ஒடிசா

By

Published : Feb 8, 2021, 2:19 PM IST

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் வனவிலங்குகளின் உடல் பாகங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக ஒடிசா சிறப்புப் பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில், அப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, யானை தந்தம், சிறுத்தை தோல் ஆகியவற்றை விற்பனை செய்துவந்த மூவரை கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பறிமுதல்செய்து, ரசாயன பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மூவரிடமும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details