புதுச்சேரி சட்டப்பேரவை வளாக அலுவலகத்தில் இருந்தபடி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரியில் புதியதாக மேலும் மூன்று பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்று பேர் வடமங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகரைச் சார்ந்தவர்கள். இவர்கள் மூவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.