உலகில் ஒவ்வொரு மனிதரின் வாழ்கையிலும் சிறிய ஆசை ஒன்று, ஒரு ஓரத்தில் இடம்பெற்றுதான் இருக்கும். சிறு வயதில் தோன்றும் ஆசைகளோ ஏராளம். நாம் தொலைக்காட்சியில் காண்பதை எல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டும், சினிமாவில் விஜய், அஜித் செய்வது போலவே ரியல் வாழ்க்கையில் நடந்து கொள்வது போன்ற ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் இவ்வுலகில் பஞ்சம் இல்லை.
ஆனால், அவற்றை நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது என்பதை பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் சிறு குழந்தைகளிடம் தெரிவிப்பதற்கு மறந்து விடுகின்றனர். அவ்வாறு, குழந்தைகளின் ஆசையைக் கேட்காத பெற்றோர்களின் அலட்சியத்தால் "எப்படி செல்ல வேண்டும் தெரியாது. ஆனால் செல்ல வேண்டும்" என்ற கனவோடு புறப்பட்ட மூன்று சிறுவர்களின் கதை தான் இது...
ஆந்திராவில் விஜயவாடா ரயில் நிலையத்தில் மூன்று சிறுவர்கள் மச்சிலிபட்டினம் - திருப்பதி எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறியுள்ளனர். மூன்று சிறுவர்களும் மிகவும் குழப்பத்தில் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த சக பயணி ஒருவர், சிறுவர்களிடம் 'எங்கு செல்கிறீர்கள், யாருடன் வந்தீர்கள்' என விசாரிக்கத் தொடங்கியுள்ளார். அதற்கு சிறிவர்கள் தெரிவித்த பதில் ரயில் பெட்டிகளுக்குள் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் நாங்கள் "துபாய்" செல்கிறோம் என கூறிவிட்டு, சாதாரணமாக இருந்துள்ளனர்.