அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டுவருகிறது. ஜம்முவைச் சேர்ந்த சன்னி ஆனந்த், காஷ்மீரை சேர்ந்த தார் யாசின், முக்தர் கான் என மூன்று இந்தியர்களுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யாசின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து நேரத்திலும் ஆதரவாக இருந்த உடன் பணிபுரிந்தோர், நண்பர்கள், சகோதரர்கள் என அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
இந்த கெளரவத்தை என்னால் நினைக்துக்கூட பாரக்க முடியவில்லை. இந்த விருதை பெறுவதில் பெறுமைக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.