ஒடிசா கடத்தல் வழக்கு குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் நபரங்கப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை அவர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பனர்குடா கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் மாலி, அனிருத்தா மாலி, ரமேஷ் மாலி என்பது விசாரணையில் தெரியவந்தது.
நபரங்கப்பூர் காவல் கண்காணிப்பாளர் குசல்கர் நிதின் தக்டு தலைமையில் மேற்கொண்ட விசாரணையின் போது 4.7 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி, 4.50 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
4.8 இரண்டு ஏக்கர் நிலம், 2 டிராக்டர்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பணப் பரிமாற்றம் செய்யப் பட்ட வங்கிக் கணக்குகளையும் காவல்துறை முடங்கியது.
கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா, சத்தீஸ்கர், பிகார் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.