சத்தீஸ்கர் மாநிலம் காவர்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாம்பு கடித்து நேற்று இறந்துள்ளனர்.
காவர்தாவின் வனஞ்சல் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இது தொடர்பாக இறந்தவரின் மனைவி கங்கா பாய் கூறுகையில், “தூங்கிக்கொண்டு இருந்தபோது கால்களின் அருகே ஏதோ அசைவது போல் இருந்தது. அது என்ன என்று அறிவதற்கு முயற்சி செய்து எழுந்தபோது அது விஷப்பாம்பு என தெரியவந்தது.
உடனே அருகில் உறங்கிக்கொண்டிருந்த என் மகனைக் கண்டபோது பாம்பு கடித்து அவன் இறந்த நிலையில் கிடந்தான். அவன் மயக்கமாக கிடக்கிறான் என நினைத்து என் கணவரை எழுப்ப நினைத்தபோது அவர் கால்களிலும் பாம்பு கடித்திருந்தது” என்று கூறியுள்ளார்.
பின்பு கங்கா பாய்க்கும் பாம்பு கடித்ததால், ஊர் மக்களே மூவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது கங்கா பாய், சமய் லால், சந்தீப் (10) ஆகிய மூவரும் இறந்துவிட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் தொடரும் பொது முடக்கம்