தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திரிபுராவில் அரிய வகை 3 பன்றிக்குட்டிகள் கண்டுபிடிப்பு!

திரிபுராவில் தலாய் மாவட்டத்தின் சலேமா பகுதியில் ஆபத்தான அரிய வகை மூன்று பன்றிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திரிபுராவில் ஆபத்தான அரிய வகை பன்றி இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
திரிபுராவில் ஆபத்தான அரிய வகை பன்றி இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

By

Published : Jun 18, 2020, 3:55 PM IST

திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தின் கீழ் உள்ள சலேமாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரிய வகை ஹாக் பேட்ஜர்கள் (hog badgers) எனப்படும் மூன்று பன்றிக்குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பன்றி மற்றும் கரடி ஆகிய இரண்டின் பண்புகளையும் இந்தவகை பன்றிகள் கொண்டுள்ளது. இவை, சிறிய பழங்கள் மற்றும் விலங்குகளை சாப்பிடும் உயிரினமாகும். கடந்த ஆண்டு அஸ்ஸாமிலும் இதுபோன்ற ஒரு அரியவகை பன்றி இனம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று பன்றிக் குட்டிகளும் செபாஹிஜாலா வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அகர்தலாவிலிருந்து கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தொலைவில் செபாஹிஜாலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது . மாநிலத்தின் அமைந்துள்ள நான்கு சரணாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

அங்கு மாற்றப்பட்டுள்ள மூன்று பன்றிக் குட்டிகளில் ஒன்று உடலில் நீர்சத்து இழந்தநிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குட்டிகளுக்கு உண்பதற்கு பால், பழங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அங்குள்ள கால்நடை மருத்துவர்கள் பன்றிக் குட்டிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அறிவியல் ரீதியாக 'ஆர்க்டோனிக்ஸ் கொலாரிஸ்' என்று அழைக்கப்படும் இந்த அரியவகை பன்றிகள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால், ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:பெர்லினுக்கு வந்த விருந்தாளிகள்... போக்குவரத்தை நிறுத்திய காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details