ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம் பஹதுர்கா பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில், திடீரென பயங்கர சத்தத்துடன் கொதிகலன் வெடித்தது. இந்த விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பரவிக்கொண்டிருந்த தீயினைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
ஹரியானா தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூவர் உயிரிழப்பு - கொதிகலன் வெடித்து மூவர் பலி
19:46 February 28
சண்டிகர்: ஜஜ்ஜார் மாவட்ட தொழிற்சாலையில் திடீரென கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல் ஆய்வாளர் விஜேந்திர் சிங் கூறுகையில், “இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முழுவதுமாக அழிந்தது. அருகிலிருக்கும், ஐந்து தொழிற்சாலைகளில் இந்த விபத்தின் தாக்கம் பரவியுள்ளது. எதனால், எப்படி? இந்த விபத்து ஏற்பட்டது என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காயமடைந்த 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:'நிலம், நீர், வானம் மூன்றிலும் சிறந்து விளங்கும் இந்தியப் பாதுகாப்புப் படை' - ராஜ்நாத் சிங்