பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த லாரி சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக, அம்மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் பிரதீஸ்குமார் தெரிவித்தார்.
சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதியது - மூன்று பேர் உயிரிழப்பு! - Tamil latest news
பாட்னா: தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரி நிலைத் தடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது," திஸ்வர கிராமம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 322-இல் வந்த லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியது. இதில் கோபமடைந்த அந்த கிராம மக்கள் லாரிக்கு தீ வைத்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் சதர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த லாரி ஓட்டுநரும், கிளீனரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாகவும், இறந்தவர்களின் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.