2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து வரும் அக்.5ஆம் தேதி முதல் வழக்கு தினசரி விசாரணைக்கு வரவுள்ளது.
2ஜி ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒத்துக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தாயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்க தற்போது முடிவெடுத்துள்ளது.
இதையும் படிங்க:காங். ஆளும் மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை இயற்றுங்கள்!