தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தால் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை - ராசா

டெல்லி: புதிய ஊழல் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று ஆ. ராசா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

By

Published : Jan 27, 2020, 11:36 PM IST

CBI's appeal infructuous A Raja tells HC
CBI's appeal infructuous A Raja tells HC

2 ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆ. ராசா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் எம் சிங்வி, "இந்த வழக்கில் ராசா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், 2018ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் இல்லை. எனவே, உடனடியாக இந்த விஷயத்தில் வழக்கு தொடர முடியாது" என்று வாதிட்டார்

விசாரணையின்போது, ராசா அமைச்சராக இருந்தபோது அவருக்கு செயலாளராக இருந்த ஆர்கே சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுரா இதே கருத்துகளை தனித் தனியே தெரிவித்திருந்தனர்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:நாட்டை பிளவுபடுத்த முயல்பவர்களை கெஜ்ரிவால் ஆதரிப்பது ஏன் - ஜே பி நட்டா கேள்வி

ABOUT THE AUTHOR

...view details