ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 மத்திய அரசால் நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். மேலும் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியுற்றனர்.
இதைக் கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின்படி கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமாக இணைய சேவைகள் பார்க்கப்படுகிறது. மக்கள் அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஊடகம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது.