ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலுள்ள உணவகங்களிலும் மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும் இணைய சேவையை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நேற்று முதல் வழங்கியுள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் உள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 400kb வேகத்தில் காஷ்மீர் பகுதிகளுக்கு இணைய சேவை மீண்டும் வழங்கப்படும். இணைய சேவை கண்டிப்பாக தேவைப்படும் இடங்களான வங்கிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலங்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இணைய சேவை வழங்கப்படும்.
அதேபோல சுற்றுலாப் பயணிகளின் தேவை கருதி தங்கும் விடுதிகளுக்கும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரியாஸ் உள்ளிட்ட மாவட்டங்களில் போஸ்ட்பெய்டு மொபைல்களுக்கு நிபந்தனையுடன் 2ஜி வேகத்தில் இணைய சேவை வழங்கப்படவுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன், அடிப்படை உரிமையான இணைய சேவையை முடக்கியதற்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியிருந்தது. அதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சக்கர நாற்காலியை கேட்ட பயணியை மிரட்டிய விமானிக்கு கட்டாய விடுப்பு!