டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், திமுக எம்.பி. ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி வரை மாபெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கின் விசாரணை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவுற்றது. இந்நிலையில் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ. ராசா உள்பட அனைவரும் நிரபராதி என நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.
இந்நிலையில், 2 ஜி வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடுகளை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி அமலாக்கதுறை இயக்குநரகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஏ.ராஜா மற்றும் பிறருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.