தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலிபான் தாக்குதலில் ஒரே வாரத்தில் 291 ஆப்கான் வீரர்கள் உயிரிழப்பு! - தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) செய்தித் தொடர்பாளர் ஜாவித் பைசல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்களில் 291 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

afghan
afghan

By

Published : Jun 23, 2020, 7:09 AM IST

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது நடத்தும் தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்களும், பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர்

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) செய்தித் தொடர்பாளர் ஜாவித் பைசல் கூறுகையில், " கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தலிபான் தாக்குதல்களில் ஆப்கான் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 291 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

500க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கடந்த 19 ஆண்டுகளில் இந்தத் தாக்குதல்தான் மிகப்பெரியது. வீரர்கள் மட்டுமின்றி தாக்குதலில் 42 மக்கள் உயிரிழந்தும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

பயங்கரவாத பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தலைமையில் ஆப்கானிஸ்தான், தலிபான்கள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இதையும் படிங்க: இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானுடன் போதும் சீனா!

ABOUT THE AUTHOR

...view details