தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டாயிரத்து 600 ரயில்கள் அடுத்த 10 நாட்களில் இயக்கப்படும் - ரயில்வே துறை

டெல்லி: இரண்டாயிரத்து 600 ஷ்ராமிக் ரயில்கள் வரும் நாட்களில் இயக்கப்பட்டு 36 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

By

Published : May 24, 2020, 9:29 AM IST

அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே வாரியம்
அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே வாரியம்

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே யாதவ், மே 1ஆம் தேதி தொடங்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் சேவை நாள் ஒன்றுக்கு 260 ரயில்கள் வீதம் இயங்குவதாகவும், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 45 லட்ச குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்துள்ளதாக கூறிய அவர், 80 விழுக்காடு ரயில்கள் உத்தரப் பிரதேசம், பிகாருக்கு செல்வதாக குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அடுத்த பத்து நாள்களில் 2 ஆயிரத்து 600 ஷ்ராமிக் ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதில் சுமார் 36 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கரோனா தொற்று இருந்த நபர்கள் தனிமைப்படுத்துவதற்கு 50விழுக்காடு ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அவை சிறப்பு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் சேவைக்கு இயங்கிவருகிறது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details